கடும் புயலால் 70 பேர் பலி - Africa
கேப் டவுன்: கடும் புயலால் தாக்கப்பட்டு 70 பேர் பலியான சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஆப்பிரிக்காவில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 50 பேர் பலியாகினர்.
இதனையடுத்து நேற்று கடும் புயல் வீசியடுதையடுத்து நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், பல குடியிருப்புப் பகுதிகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் பலரும் கடும் புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கைச் சீற்றம் இதுதான் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, அந்நாட்டு அலுவலர்கள் கூறும்போது, 'நாட்டின் இந்தச் சூழல் மிகந்த வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் வழங்கும் பணியில் உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
https://www.etvbharat.com/english/national/international/africa/death-toll-due-to-storm-in-south-africa-mounts-to-70-70-70/na20190425214602459
Conclusion: