ETV Bharat / international

உக்ரைன் போரில் ஐநா வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா...இந்தியா, சீனா புறக்கணிப்பு - TRUMP SIDES WITH RUSSIA IN UN VOTES

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் டிரம்ப் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ரஷ்ய அதிபர் புதின்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ரஷ்ய அதிபர் புதின் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 12:32 PM IST

ஐக்கியநாடுகள்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமித்து போரில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுடன் கூடிய ஐரோப்பிய நாடுகள் முன் மொழிந்த ஐநா தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் மூன்று ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவுக்கு உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய ஆதரவு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. கடந்தவாரம் நடந்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலும் இவை தவிர்த்தன.

இதனிடையே ஐநா சபையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தன. உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், உடனடியாக உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.

இதையும் படிங்க: அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பயணிகள் அதிர்ச்சி!

இது டிரம்ப் நிர்வாகத்துக்கு முக்கியமான பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், ஐநா சபையின் தீர்மானங்கள் சட்டரீதியான அமல்படுத்துவதற்கு உரியதல்லை. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் குறித்த சர்வதேச கருத்தின் உணர்வாக மட்டுமே இது பார்க்கப்படுகிறது. உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. அமெரிக்கா உள்ளிட்ட 65 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு என்பது குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஐநா சபை கூட்டத்தில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனை அடுத்து அமெரிக்கா தம்முடைய தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனியாக கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக பலர் உயிரிழந்துள்னர். எனவே உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தீர்மானத்தில் ரஷ்யாவை குற்றம் சாட்டும் வகையில் எந்தொரு வார்த்தையும் இடம் பெறவில்லை. இதற்கு 10 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், கிரேக்கம், சுலோவேனியா ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. சீனாவும் இதில் பங்கேற்கவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.