இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் - இளம்பெண் தற்கொலை! - நிச்சயதார்த்தம் ஆகவிருந்த இளம்பெண் தற்கொலை
சென்னை: கோயம்பேடு பகுதியில் இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை கோயம்பேடு சின்மயாநகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவருடைய மகள் பிரியங்கா (29). பிரியங்காவுக்கு வருகின்ற 9ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் பிரியங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை ராமகிருஷ்ணன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கு மாட்டி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பிரியங்காவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்தது. மேலும் பிரியங்காவின் தந்தை ராமகிருஷ்ணனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் ஆக இருந்த பெண் திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு போலீசார் விசாரணை.
சென்னை கோயம்பேடு வேத சாலை சின்மயாநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60).இவருடைய மகள் பிரியங்கா(29) இவருடைய மகளுக்கு வருகின்ற 9ம் தேதி அன்று நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் பிரியங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை ராமகிருஷ்ணன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தனது மகள் தூக்கு மாட்டி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் முதல் கட்ட விசாரணையில் பிரியங்காவுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது. மேலும் பிரியங்கா தந்தை ராமகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டே நாளில் நிச்சயதார்த்தம் ஆக இருந்த பெண் திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion: