Live: தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு! - TVK VIJAY
🎬 Watch Now: Feature Video


Published : Feb 26, 2025, 10:14 AM IST
|Updated : Feb 26, 2025, 1:50 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று காலை (பிப்ரவரி 26) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முக்கிய அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் (Jan Suraaj) தலைவருமான பிரஷாந்த் கிஷோர் கலந்து கொண்டுள்ளார். மேலும், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். மேலும், இவ்விழாவில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் எனக் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 நபர்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பிரத்யேக பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வருகை புரிந்துள்ளதால், சிலர் பாஸ் இருந்தும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Last Updated : Feb 26, 2025, 1:50 PM IST