கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்யும் காளைகள்! - JALLIKATTU IN MADURAI
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/640-480-23517740-thumbnail-16x9-jallikattu.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 11, 2025, 9:59 AM IST
|Updated : Feb 11, 2025, 4:09 PM IST
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், தொடர்ந்து இன்று (பிப்.11) மட்டும் நாளை (பிப்.12) என இரண்டு நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் நாளான இன்றைய போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7 மணியளவில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் தங்க காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட, மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த காளைகள் இன்று பங்கேற்கின்றன. வெகு சிறப்பாக நடக்கும் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கக் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Feb 11, 2025, 4:09 PM IST