புதுடெல்லி: ஒரு நிறுவனத்தின் குழுவில் உள்ள தனிநபர்கள் தங்கள் பெயரில் டிமேட் கணக்கு தொடங்க அனுமதிக்கும் முடிவை 25ஆம் தேதியன்று செபி அறிவித்துள்ளது. இது வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நபர் தன் பெயரில் தொடங்கும் டிமேட் கணக்கில் மியூச்சுவல் பண்ட், அரசு செக்யூரிட்டிகள், பெருநிறுவனங்களின் பாண்ட்கள் ஆகிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த டிமேட் கணக்கில் ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்க முடியாது. செபியின் நடைமுறைகளுக்கு இணங்க இந்த டிமேட் கணக்கை நிர்வகிக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருக்கும் தனிநபர்கள் தங்கள் பெயரில் டிமேட் கணக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று செபிக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சட்டரீதியான வழிமுறைகளை ஆராய்ந்து, பங்கெடுப்பாளர்களிடம் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட நிலையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்ய நிறுவனத்தின் குழுவில் உள்ள தனிநபர்கள், அவர்களின் பெயரில் டிமேட் கணக்கு தொடங்க அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் செக்யூரிட்டிகள், மியூச்சுவல் பண்ட்கள், பெருநிறுவன பாண்ட்கள், அரசின் செக்யூரிட்டிகள் ஆகியவற்றை வைத்திருக்க முடியும்,"எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 மில்லியன் டாலர் முதலீடு செய்தால் கோல்டு கார்டு விசா... டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
மேலும், "இந்த டிமேட் கணக்கில் ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்க, சப்கிரைப் செய்ய அனுமதி இல்லை. குழுவில் உள்ள தனிநபர் உரிய அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குழுவில் இடம் பெற்றிருக்கும் தனிநபர்கள் பான் அட்டைகள், தனிநபர்களின் முதன்மை அலுவலர் (செயலாளர் அல்லது பொருளாளர்) பற்றிய தகவல்களை தர வேண்டும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், முதன்மை அலுவலர் சட்ட பிரதிநிதியாக செயல்படுவார்,"எனக் கூறப்பட்டுள்ளது.
குழுவில் இடம் பெற்றுள்ள தனிநபர் பெயரில் வழங்கப்படும் டிமேட் கணக்குக்கு குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உள்ளது. செபி வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கையில், "பொறுப்புடைமைகளின் பட்டியல் மற்றும் தெரிவிக்கப்பட வேண்டிய விவரங்களுக்கான வழிமுறைகளை தொழிலக ஒழுங்குமுறை அமைப்பு, பங்கு சந்தைகள் ஆகியவை அவர்களுடைய இணையதளங்களில் வெளியிட வேண்டும்,"என்று கூறப்பட்டுள்ளது.
செபியின் ஆலோசனையுடன் பிஐசிசிஐ, சிஐஐ, அசோசெம், ஐஎஸ்எஃப் ஆகிய தொழில் அமைப்புகள் தொழிலக ஒழுங்குமுறைகளை உருவாக்கி உள்ளன. விதிமுறைகளுக்கு இணங்கள் நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.