ETV Bharat / bharat

கும்பல் தாக்குதல் வழக்கில் 3 காவலர்கள் இடைநீக்கம்

ஜார்கண்டில் கும்பல் தாக்குதல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி மூன்று காவலர்களை ராஞ்சி சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்துள்ளார்.

Three cops suspended in Jharkhand lynching case

author img

By

Published : Mar 9, 2021, 6:08 PM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை அடுத்த கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்துவந்தவர் சச்சின் குமார் வெர்மா. இவர் உப்பர் பஜார் பகுதியில் டாடா 407 ரக வாகனத்தைத் திருடிவிட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பலர் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சச்சின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சச்சின் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் ஒரு அப்பாவி. அவர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதையடுத்து, இளைஞரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் கூறிவந்த நிலையில், மூன்று காவலர்களுக்கு சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களையும் ராஞ்சி சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.