ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்... ஆனா ஒரு கண்டிஷன்: நடிகை ஷெர்லின் சோப்ரா - ஷெர்லின் சோப்ரா திருமணம்
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள தயார், ஆனால் ஒரு நிபந்தனை உண்டு என நடிகை ஷெர்லின் சோப்ரா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மும்பை: பிரபல நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா தனக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளத் தயார். ஆனால் தனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு என தெரிவித்திருந்தார். தற்போது அவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் ஷெர்லின் சோப்ரா. இவர் உடையிலிருந்து சின்ன சின்ன விஷயங்களில் என தன்னை எப்போதுமே சமூக வலைதளத்தில் பிஸியாக வைத்துக் கொள்ளும் நடிகை எனலாம். இவரது இன்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே ரசிகர்களை கிறங்கடிக்கும் வண்ணம் தான் அனைத்து விதமாக போஸ்ட்களும் இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆபாச படங்களை கோடிக்கணக்கில் விற்ற வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை ஷெர்லின் சோப்ரா சமூக வலைதளத்தில் கொடுத்திருந்தார். அதன் பிறகு இச்சம்பவம் காட்டுத்தீ போல பரவியது.
தற்போது பிரபல இண்டாகிராம் பக்கத்திற்கு பேட்டி ஒன்றை ஷெர்லின் சோப்ரா அளித்து உள்ளார். அந்த பேட்டியில், உங்களுக்கு ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என கேள்வி கேட்கின்றனர். அதற்கு ஷெர்லின் சோப்ரா ஏன் இல்லை. விருப்பம் தான், ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அது என்ன கண்டிஷன் என்று கேட்டதற்கு, திருமணத்திற்குப் பின், எனது குடும்பத்தின் பெயர் சோப்ராவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, ஷெர்லின் சோப்ராவின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. தற்போது ராகுல் காந்திக்கு 53 வயது ஆகின்றது. ஆனால் அரசியல், மக்கள், கட்சி என ஓடிக் கொண்டிருப்பதால் இதுவரை ராகுல் காந்திக்கு திருமணம் செய்து கொள்வதற்காக விருப்பம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில், மக்களிடம் பேசும் வீடியோ ஒன்றில் பிரியங்கா காந்தியிடம் ஒரு பெண் ராகுலுக்கு எப்போ கல்யாணம் என்று கேட்கிறார். அதற்கு, பிரியங்கா காந்தி, ராகுலுக்கு ஏற்ற ஒரு நல்ல பெண்ணாக பாருங்கள் என்று தெரிவிப்பார். அந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், ஷெர்லின் சோப்ராவும் இப்படி தெரிவித்துள்ளது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.