ETV Bharat / state

பழமையான 'தமிழி' எழுத்து; ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள்! - TAMILI SCRIPT TRAINING

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களை பழந்தமிழ் எழுத்துருவாக போற்றப்படும் 'தமிழி' வரி வடிவத்திலேயே பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதி படித்து மகிழ்ந்தனர்.

சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவர்கள்
சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 5:55 PM IST

ராமநாதபுரம்: சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களை பழந்தமிழ் எழுத்துருவாக போற்றப்படும் 'தமிழி' வரி வடிவத்திலேயே எழுதி படித்து மகிழ்ந்த பள்ளி மாணவர்கள். ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளைப் போல் தமிழ் எழுத்துரு அமைந்துள்ளது குறித்து அறிந்த அம்மாணவர்கள் வியப்படைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பாக தமிழி கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இதில், கல்வெட்டு எழுத்துகள் மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தின.

இந்த பயிற்சிக்கு தலைமையாசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் தலைமை தாங்கினார். மன்றச் செயலர் வே.ராஜகுரு மாணவர்களுக்கு அளித்த பயிற்சியின்போது, "சங்ககாலத்தில் பயன்பாட்டில் இருந்த தமிழி கல்வெட்டு எழுத்துகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், நடுகற்கள், குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துச் சான்றுகள், தமிழ் மொழியின் தொன்மைக்கு முதன்மைச் சான்றாகும்" என்றார்.

சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவர்கள்
சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)

மேலும், "அசோகர் காலத்துக்கு முன்பே தமிழர் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கு தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் ஆதாரமாகும். வணிகப் பெருவழிகளில் உள்ள முக்கிய நகரங்களின் குன்றுகளில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மதுரையில் தான் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இப்பயிற்சியின் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம், திருமலை, ஜம்பை உள்ளிட்ட மலைக்குகைகளில் உள்ள தமிழி கல்வெட்டுகளின் படங்கள் மற்றும் அச்சுப்படிகள் மூலம் படிக்கவும் எழுதவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளின் எழுத்துகள் தமிழி போல் உள்ளதைக் கண்டு வியந்த மாணவர்கள் 'தமிழி' எழுத்து வடிவத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.

புறநானூற்றுப் பாடல்களை தமிழி எழுத்தில் எழுதி பயிற்சி பெற்றனர். கல்வெட்டு பயிற்சி பெற்ற ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி தலைமையாசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் பாராட்டினார்.

பின்னர், தமிழ் மொழியின் பெருமையை மட்டுமன்றி அதன் பழமையான எழுத்து வரி வடிவத்தை கற்றுக் கொண்டது மிகச் சிறப்பாக உள்ளது எனவும், தொடர்ந்து இந்த எழுத்தை நாங்கள் பயன்படுத்துவோம் எனவும் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.