ETV Bharat / state

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..! - PONGAL HOLIDAY

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில் தமிழக அரசு கூடுதலாக ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 5:56 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு, ஜன.14,15,16,18,19 ஆகிய ஐந்து நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை ஆகும். ஆனால், இடைப்பட்ட 17 ஆம் தேதி விடுமுறை கிடையாது என்பதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள் அந்த தேதியில் மீண்டும் திரும்பி வருவது சிரமம் என்றும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறும் அரசுக்கு கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில், ஜனவரி 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!

அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.