ETV Bharat / state

"திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலுமே கோயில்கள் புறக்கணிக்கப்படுகிறது" - பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு! - PONN MANICKAVEL

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலுமே இந்து கோயில்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 5:27 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 38 ஆயிரத்து 500 கோயில்களைக் கையில் வைத்துக்கொண்டு, நான் கோயிலுக்குள் நுழைய மாட்டேன் எனக் கூறி முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார். அதற்கு என ஒரு அமைச்சரை மட்டும் நியமித்து உள்ளது சரியானது அல்ல. தற்போது திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலுமே இந்து கோயில்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், "கோயில்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் 400 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க வேண்டும். கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளது. அதற்கு காரணமான ஆளும் கட்சியினர் வெட்கி, தலைகுனிய வேண்டும். மேலும், தென்காசி கோயிலில் தீ வைத்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நீங்களும் போராட வேண்டும். இந்து அமைப்புகளும் போராட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்.

பெரும்பாலான கோயில்களில் விளக்குகள் கூட எரிவதில்லை. இறை நம்பிக்கை இல்லாத கோயிலுக்குள் நுழைய விரும்பாத ஸ்டாலின், 38 ஆயிரத்து 500 கோயில்களை மட்டும் ஒரு அமைச்சரின் கீழ் நிர்வாகத்தில் வைத்துள்ளார். அதற்கு குடமுழுக்கு விழாவை மட்டும் தான் அரசாங்கம் நடத்துகிறது.

புனரமைப்பு வேலைகளை தொல்லியல் அறிஞர்கள் ஒத்துழைப்புடன் நடத்த வேண்டும். கோயில்கள் மூலம் ரூபாய் 650 கோடி வரியினை தமிழக அரசு வசூலிக்கிறது. தமிழக அரசுக்கு கோயிலிலிருந்து வரி மட்டும் வேண்டும். ஆனால், கோயில்களை பராமரிப்பு செய்வது புறக்கணிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏழு கோயில்கள் பராமரிப்பின்றி உள்ளது வேதனைக்குரியதாக இருக்கிறது.

இதையும் படிங்க: எல்லை விரிவாக்கம்: 'விருப்பம் இல்லை என்றால் தெரிவிக்கலாம்' - பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு!

இங்குள்ள கோடிக்கணக்கான மதிப்பில் உள்ள சிலைகள் திருடு போகும் நிலையில் கட்டடங்கள் இல்லாமல் வெளியில் கிடக்கிறது. இந்து அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என அண்ணாமலை சொன்னது அருமையான கருத்து. அதற்காக நான் பாஜக சேர்ந்தவன் அல்ல. அந்த கருத்தைச் சொன்னதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் சரியாக வழி நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் போதை பழக்கத்திற்குப் அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

சில அமைச்சர்களை சிறையில் போட வேண்டும்:

மத்திய தொல்லியல் துறைக்கு நிதி அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,308 கோடிக்கு மேல் நிதியளித்து வருகிறார். ஆனால் மத்திய தொல்லியல் துறையும், கோயில்களை பாதுகாப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பின்றி கிடப்பதற்கு ஆண்ட கட்சி, ஆளுங்கட்சி என இரண்டும் தான் பொறுப்பு.

சில அமைச்சர்கள் வாய் கிழியப் பேசுகின்றனர். அவர்களை எல்லாம் பிடித்து சிறையில் தான் போட வேண்டும். ஆனால், அப்படி சிறையில் போடுவதற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது. அறநிலையத்துறை என்ற துறையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சட்டத்தைத் திருத்த வேண்டும். அதுகுறித்து தமிழகத்தில் முதலமைச்சராக ஆசைப்படும் அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், சீமான், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நாங்கள் வந்தால் சட்டத்தைத் திருத்தி அறநிலையத்துறை கலைப்போம் என்று கூறவேண்டும் என்றார்.

மேலும், கோயில்களைப் பாதுகாப்பதற்கு விரைவில் இந்து அமைப்புகளை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளேன். இதற்காக கூட்டங்களை நடத்த உள்ளேன் என்று கூறிய அவர், தமிழகத்தில் தற்போது சிலை கடத்தல் பிரிவு காவல்துறை செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை," எனக் குற்றஞ்சாட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.