ETV Bharat / state

கள்ள ஓட்டுக்கு எதிர்ப்பு.. ஒரு குடும்பத்தை 5 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த ஊர்..? தூத்துக்குடியில் அதிர்ச்சி! - THOOTHUKUDI SEPARATED FAMILY

தூத்துக்குடி அருகே கள்ள ஓட்டு போட அனுமதிக்காததால் ஒரு குடும்பத்தை மட்டும் ஐந்து ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவஞானம் குடும்பம்
சிவஞானம் குடும்பம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 6:10 PM IST

தூத்துக்குடி: கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்தி நிறுத்தியதாக பஞ்சாயத்து தலைவியின் தூண்டுதலால் ஊர் மக்கள் தங்களை ஊரை விட்டே ஒதுக்கிவைத்து வருவதாகவும், அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு குடும்பம் தங்களது ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம். இவர் கடந்த முறை நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியுள்ளார்.

அப்போது கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பூத் ஏஜெண்டாக இருந்த சிவஞானம் கள்ள ஓட்டு போடுவது தவறு, போடக்கூடாது என வந்தவர்களை அறிவுரை கூறி தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கள்ள ஓட்டு போட அனுமதிக்காமல் தடுத்ததால், பஞ்சாயத்து தலைவி சுந்தரலட்சுமி அவரது கணவரின் தூண்டுதலின் பேரில் மற்றும் ஊர் கமிட்டியினர் சேர்ந்து சிவஞானம் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு நீர் வரக்கூடிய வாய்க்கால்களையும் அடைத்து விட்டதாக கூறும் இவர்கள், தங்களது வயல்களில் வேலை செய்வதற்கு கிராம மக்கள் யாரையும் அனுமதிக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகுந்த மன வேதனைக்கு உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநடப்பு, சர்ச்சை, அமளி.. சட்டப்பேரவையில் அப்படி என்னதான் நடந்துச்சு..? வாங்க பாப்போம்..!

மேலும், சிவஞானம் கூறுகையில், குடும்பத்தினர் கடந்த 2020 ஆம் ஆண்டு இது சம்பந்தமாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோவிலில் சாமி கும்பிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீருக்கு தோன்டுவதாக கூறி எங்கள் வீட்டு முன்பு இருந்த சாலையையும் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலான நிலையில் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்துள்ளோம்.

மேலும், மாவட்ட ஆட்சியர் விரைந்து தங்களுக்கு மன ரீதியான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.