பிரதமர் மோடி பதவியேற்பு விழா; நேபாள பிரதமர் பங்கேற்பு! - sharma oli
காத்மாண்டு: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு, நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் நரேந்திர மோடி. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி விடுத்திருந்த அழைப்பை ஏற்று, நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வருகை தரவுள்ளார்.
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை வங்க தேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 'பிம்ஸ்டெக்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கிர்கிஸ்தான் நாட்டின் அதிபர் சூரன்போய் ஜீன்பெகோவை (Sooranbay Jeenbekov)-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.