இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறம் எனவும் தேர்தல் ஆணையம் மார்ச் 10ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி 18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கான 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதில் ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிமில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டுமே முதல்கட்ட தேர்தல் நடைபெறகிறது.