ETV Bharat / bharat

வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மரண பயம்! - sleeper cells

ஜெய்ப்பூர்: என்னையும் தனது குடும்பத்தினரையும் பழிவாங்க பயங்கரவாத குழுக்கள் திட்டம் தீட்டிவருவதாக நீதிபதி அஜய் குமார் மிஸ்ரா காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

police
police
author img

By

Published : Sep 11, 2020, 12:33 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2008ஆம் ஆண்டு மே மாதம் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 71 பேர் உயிரிழந்தனர், 185 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியாவின் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பேற்றது. இச்சம்பவத்தில் முகமது சைப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரகுமான், ஷாபாஸ் உசேன் உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது சைப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரகுமான் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அஜய் குமார் சர்மா தீர்ப்பளித்தார். ஷாபாஸ் உசேன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

வெடிகுண்டு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி அஜய் குமார் சர்மா, அண்மையில், டிஜிபி பூபேந்திர சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், "எனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. ஆகையால் எனக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பயங்கரவாத குழுக்கள் என்னையும், தனது குடும்பத்தினரையும் பழிவாங்க காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் மறைமுகமாக என் மீது மதுபாட்டில்கள் வீசப்பட்டன. நான் வசிக்கும் பகுதியில் சிலர் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்வது அச்சத்தை தருகிறது.

அதற்கான ஆதாரமாக சில புகைப்படங்களையும் அனுப்பிவைத்துள்ளேன். இந்தக் கும்பல் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புவைத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்த அமைப்பில் ஸ்லீப்பர் செல்கள் அதிகம் இருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா-சீனா மோதல்: தகராறை சுமுகமாகத் தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஒப்புதல்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.