ETV Bharat / state

விவசாயிகளுக்கு நற்செய்தி.. மத்திய வேளாண் அமைச்சகத்தின் 'விஸ்தார்' திட்டத்தில் இணைந்த சென்னை ஐஐடி! - CHENNAI IIT

சென்னை ஐஐடி, மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது.

விஸ்தார் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஸ்தார் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 10:54 PM IST

சென்னை: சென்னை ஐஐடி, மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து,
டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும்
மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது.

சென்னை ஐஐடியில் உள்ள ஸ்டார்ட்அப் மற்றும் ரிஸ்க் பைனான்சிங் குறித்த ஆராய்ச்சி மையமும் (Centre for Research on Start-ups and Ris Financing) ஒய்நோஸ் வென்ச்சர் இன்ஜின் (YNOS Venture Engine) எனப்படும் ஐஐடி தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து இந்திய ஸ்டார்ட்அப் அமைப்புமுறை தொடர்பான விரிவான தகவல்களைஉருவாக்கியுள்ளன.

விவசாயம் மற்றும் சார்புடைய துறைகளில் ஸ்டார்ட்அப்கள் பற்றிய தகவல்களை விஸ்தார் (VISTAAR) தளத்தில் இடம்பெறச் செய்வது தொடர்பாக வேளாண் அமைச்சகம் சென்னை ஐஐடி இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஸ்டார்ட்அப்களின் திறன்கள், சலுகைகள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை எளிதாக அணுக முடியும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி ஸ்டார்ட்அப் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தில்லைராஜன் கூறும்போது, "இந்தியாவின் சமூக- பொருளாதாரத் துறையின் முதுகெலும்பாக விவசாயம் அமைந்துள்ளது. எனவே, விவசாயத்துறையை வலுப்பெறச் செய்ய உறுதியான கொள்கைகள் அவசியமாகின்றன. விவசாயம் சார்ந்த துறைகளின் மதிப்புச் சங்கிலி முழுவதிலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதில் ஸ்டார்ட்அப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒய்நோஸ் வென்ச்சர் இன்ஜின் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்டார்ட்அப் தகவல் தளத்தில், விவசாயம் மற்றும் வேளாண் துறை தொடர்புடைய ஏறத்தாழ 12,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வளமான தகவல்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் மூலமாக விவசாயிகளை எளிதில் சென்றடைவதுடன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் விரிவாக்க சேவைளின் செயல்திறனுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்." எனத் தெரிவித்தார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலர் (விரிவாக்கம்) சாமுவேல் பிரவீன் குமார் கூறும்போது, "வேளாண் ஸ்டார்ட்-அப்களின் புதுமையான தொழில்நுட்பங்கள் விவசாயத்தை நிலைத்து நிற்கவும், காலநிலையைத் தாங்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு பங்களிக்கின்றன. எனவே வேளாண் ஸ்டார்ட்அப்களின் தொழில்நுட்பத்தை விரிவாக்கம் மூலம் விவசாயிகளுடன் இணைப்பது என்பது அணுகல்- பின்பற்றுதல்
கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாகும்." என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.