ETV Bharat / state

பகலில் வடை கடை வியாபாரம்.. இரவில் திருட்டு - பலே திருடன் சிக்கியது எப்படி? - ARRESTED FOR ROBBERY

தேனியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த தாலி செயின் மற்றும் கவரிங் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், தேனி மாவட்ட காவல்நிலையம்
கைது செய்யப்பட்ட நபர், தேனி மாவட்ட காவல்நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 7:12 AM IST

தேனி: கம்பம் பகுதியில் பகலில் வடை கடை நடத்தி வந்தும், இரவில் செயின் பறிப்பில் ஈடுபட்டும் வந்த பலே கில்லாடி நபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற தாலி செயின் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வி (வயது 45). இவர் டிசம்பர் 11ஆம் தேதி கடையில் வேலை முடிந்துவிட்டு, இரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ரொட்டி கடை சந்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆனந்த செல்வியின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறுடன் கூடிய 6 கிராம் தங்கத் தாலி மற்றும் கவரிங் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த செல்வி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், இருசக்கர வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில், கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த செந்தில்வேலவன் (44) சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இவர் சாலை ஓரத்தில் வடைக் கடை வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மது, போதை கலாச்சாரம் பெருகிவிட்டது; பாஜக பிரமுகர் கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டு!

அதையடுத்து, செந்தில்வேலவனைப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஆனந்த செல்வியிடம் 6 கிராம் தங்க தாலி, ரூபாய் 600 மதிப்புள்ள கவரிங் சங்கிலியைப் பறித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து தாலி, கவரிங் செயினை பறிமுதல் செய்த போலீசார் செந்தில்வேலவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சாலை ஓரத்தில் பகல் நேரத்தில் வடை கடை நடத்தி வந்ததும், இரவு நேரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.