மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! - நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் கைவிடப்பட்ட கட்டடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
மால்டா மாவட்டம், மாஜ்பூர் கிராமத்தில் கைவிடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இங்கு, ஐந்து குடுவைகளில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர், அப்பகுதிகளை சுற்றிவளைத்த காவல் துறையினர், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை வரவழைத்து நாட்டு வெடிகுண்டுகளை அகற்றினர். கைவிடப்பட்ட கட்டடத்தில், இச்சம்பவம் நடந்தது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் பேருந்து மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு