நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை துரத்திய யானைகள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ! - Wild elephants chasing youngsters - WILD ELEPHANTS CHASING YOUNGSTERS
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-06-2024/640-480-21780954-thumbnail-16x9-th.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 24, 2024, 1:19 PM IST
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மைசூரு - கோழிக்கோடு பிரதான சாலையில் கடந்த வியாழக்கிழமை சாலையின் இருபுறங்களிலும் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே காரில் வந்தவர்கள் யானை நிற்பதை கண்டு காரை நிறுத்தி யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும், யானை இருப்பதை அறியாமல் வேகமாக முன்னே சென்றுள்ளனர். அப்போது யானைகளை கண்டதும் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். இந்நிலையில் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானை நின்றிருந்ததால் காட்டு யானைகளை கடந்து சென்றுவிடலாம் என நினைத்து இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றுள்ளனர்.
இதனிடையே அந்த நபர்களை நோக்கி இரண்டு யானைகளும் ஆவேசமாக துரத்திய நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு அங்கிருந்து விழுந்தடித்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த வழியே காரில் பயணித்தவர்கள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.