வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள்; அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போக்குவரத்து போலீஸ்! - ARCADU SALAI
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2024, 4:27 PM IST
வேலூர் : வேலூர் மாவட்டம், ஆற்காடு சாலையில் பிரபல சிஎம்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்வர்.
இதனால் இம்மருத்துமனை அமைந்திருக்கின்ற ஆற்காடு சாலையானது எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடனும் மிகுந்து காணப்படும். இந்த போக்குவரத்து நெரிசலால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் இங்குள்ள பொதுமக்கள் ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் மூலம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ரஜினி மற்றும் சரவணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.