வேலூரில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - assaulting petrol punk employee - ASSAULTING PETROL PUNK EMPLOYEE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 26, 2024, 10:19 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் முடினாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கினை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இங்கு மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், மதன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவில் பணியில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது, இளைஞர் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பெட்ரோல் நிரப்பியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு மதன் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, மூன்று மர்ம நபர்கள் மதுபோதையில் வந்து, ஊழியர் மதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்படி, கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஊழியர் மதனை தாக்கியவர்கள் முனியாம்பட்டைச் சேர்ந்த ரஜினி (48), ராஜசிம்மன் (32) மற்றும் கபிலன் (50) என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்பு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.