தென்காசியில் உயிர்பிரிந்த ஆண்டவரை வலது தொடையில் மரியன்னை வைத்துள்ள 10 அடி உயரமுள்ள சுரூபம்! - tenkasi - TENKASI
🎬 Watch Now: Feature Video
Published : Sep 24, 2024, 12:04 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை மகிமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சுரூபம் 20 அடி உயரமும், சிலுவை 25 அடி உயரமும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த ஆண்டும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத உயிர்பிரிந்த ஆண்டவரை வலது தொடையில் மரியன்னை வைத்துள்ள 10 அடி உயரமுள்ள சுரூபம் இங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சிலுவை மகிமை பெருவிழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி, இயேசுவின் திருப்பாடுகளின் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வியாகுல அன்னை சுரூபம், ஆண்டவரின் பின்னங்கையை கல்தூணில் கட்டிய சுரூபம், ஆண்டவரின் முன்னங்கையை கல்தூணில் கட்டிய சுரூபம், அடக்க ஆண்டவர் சுரூபம், உயிர்த்த ஆண்டவர் சுரூபம் ஆகிய சுரூபங்களை அர்ச்சித்தார்கள். பின்பு ரதபவணியை துவக்கி வைத்தார். திருச்சிலுவை ஆலயத்தை நோக்கி கிறிஸ்தவ பெருமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஏசுநாதர் உடன் இருந்த சீடர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட ரத பவனியை இழுத்துச் சென்றனர். பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இப்பெருவிழாவில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.