மாட்டிகினாரு ஒருத்தரு… கர்த்தரிடம் கைவரிசை காட்டிய திருடன்!... சிசிடிவி வெளியீடு - church money theft - CHURCH MONEY THEFT
🎬 Watch Now: Feature Video


Published : Apr 8, 2024, 8:36 PM IST
திண்டுக்கல்: முள்ளிப்பாடியில் உள்ள தேவாலயத்திற்குள் பக்தர் ஒருவர் பயபக்தியோடு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய வந்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் சென்று யாருக்கும் தெரியாமல் அதனுள் கையை விட்டு காசை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்.
இதன் சிசிடிவி காட்சியை எதார்த்தமாகப் பார்த்த தேவாலய நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதே போல் இதற்கு முன்பாக பலமுறை உண்டியலில் இருந்து காசு காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் தான் இந்த பக்தர் பயபக்தியோடு தேவாலயத்திற்கு வந்து கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்பது போல் ஆலய உண்டியலில் இருந்து காசை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது பெண் புகார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. - Woman Sexual Harassment In Dindigul