சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 17 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை, ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு அட்டவணையின் படியும், 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு, நாளை முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான அட்டவணையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பதிவில், “பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆம் தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணையின் படியும், 17 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
— Chennai Metro Rail (@cmrlofficial) January 13, 2025
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16…
இதையும் படிங்க: பொங்கல்: கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரை - சென்னை கூடுதல் மெமு ரயில்!
ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:
- காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
சனிக்கிழமை அட்டவணை:
- காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.