நெருப்பே இல்லாமல் பால் பொங்கும் அதிசயத் திருவிழா.. நெல்லை மீனாட்சிபுரத்தில் கோலாகலம்! - புது அம்மன்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 1, 2024, 8:35 PM IST
|Updated : Feb 6, 2024, 6:52 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ளது, உலகம்மன் கோயில். இந்த கோயிலில் உலக அம்மன், சியாமளா தேவி அம்மன், புது அம்மன் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கான கொடை விழா, கடந்த ஜனவரி 23ஆம் தேதி கால்நாட்டு மற்றும் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
இந்த நிலையில், அப்பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் மதுக்கொடை விழா எனும் நூதன வழிபாடு இன்று நடைபெற்றது. வாழை இலைகளில் நெல் மணிகளை பரப்பி, மண்பானைக்குள் தண்ணீரில் ஊற வைத்த பச்சரிசி மற்றும் நவதானியம் மற்றும் சாம்பிராணி புகைகளை அடைத்து, நெல் மணிகள் மேல் வைத்து விடுவார்கள்.
பின்னர் பானையில் பாலை ஊற்றும்போது நெருப்பே இல்லாமல் மண் பானைக்குள் இருந்து பால் பொங்கும். தங்கள் பகுதியில் துர் மரணங்கள் மற்றும் தீமைகள் நடைபெறாமல் இருப்பதற்காக, மகிஷாசூரனுக்கு இந்த மதுக்கொடை கொடுக்கப்படுகிறது என்பது ஐதீகம். இந்த நூதன வழிபாட்டிற்காக திருக்கோயில் ஓதுவார், மூர்த்தி அம்மனுக்கு விரதம் இருந்து, காப்பு கட்டி இந்த மதுக்கொடை நிகழ்வை நடத்துகிறார்கள். இந்த விழாவில் முப்பெரும் தேவிகளும் மூன்று சப்பரங்களில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் செய்தனர்.