காரைக்குடி அருகே ஸ்ரீ விசாலாட்சி ஆண்டபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்! - Visalakshi Andapureeswarar Temple - VISALAKSHI ANDAPUREESWARAR TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 21, 2024, 8:48 PM IST
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆலங்குடி கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ விசாலாட்சி ஆண்டபுரீஸ்வரர் கோயிலில் இன்று (ஏப்.21) வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கோயிலில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் உள்ளிட்ட பிரகார தெய்வங்களுக்கும் தனித் தனியாகக் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 19ஆம் தேதி கணபதி பூஜையுடன் முதல் கால பூஜை தொடங்கிய நிலையில், இன்று நான்காம் கால பூஜை தொடங்கி கோ பூஜை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹீதியுடன் தீபாராதனை ஆகியவற்றை நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் திருக்கடங்கள் யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்கக் கோயிலை வலம் வந்தது. பின்னர் தொடர்ந்து கோபுர கலசங்களுக்குச் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்கச் சிவ பூஜைகள் செய்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குச் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.