திருச்சி இனாம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்! - மாசி மாத தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 12, 2024, 2:36 PM IST
திருச்சி: பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களுள் ஒன்று சமயபுர மாரியம்மன் கோயில். இந்த கோயில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோயிலில் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் என்பது நம்பிக்கை. இதனால் இனாம் சமயபுரத்தில் உள்ள கோயில் ஆதி மாரியம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதா தேரோட்டத்தை முன்னிட்டு, தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு, பூத்தட்டுகளை தேரோடும் வீதி வழியாக கோயிலுக்கு கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர், வரும் 18ஆம் தேதி 2வது வார பூச்சொரிதல் விழாவும், 25ஆம் தேதி 3வது வார பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது. குறிப்பாக முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.