குமரியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் அதன் நேரலை காட்சிகள்! - PM Modi kanyakumari Visit
🎬 Watch Now: Feature Video


Published : Mar 15, 2024, 11:44 AM IST
|Updated : Mar 15, 2024, 12:43 PM IST
கன்னியாகுமரி: பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் அதன் நேரலை காட்சிகள்..நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் இறங்கியுள்ள அவர் திருப்பூர், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசினார். அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அவர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஜான்பாண்டியன் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.இக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Last Updated : Mar 15, 2024, 12:43 PM IST