பழமையான ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்.. வத்தலக்குண்டில் நெகிழ்ச்சி சம்பவம்! - banyan tree Kumbhabhishekam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 3:49 PM IST

thumbnail
ஆலமரத்திற்கு நடத்தப்பட்ட கும்பாபிஷேகக் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: மரங்கள் சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதோடு, அதன் சமநிலையைப் பேணுவதில் பெரும் கருவியாக இருந்துவருகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் பெரும் சக்தியாகவும் மரங்கள் விளங்குகின்றன. எனவே தான் இன்றுவரை மரம் நடுவதையும், காடுகளைக் காக்க வேண்டும் என்பதையும் சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்து வருகின்றன. 

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் உள்ள மிகவும் பழமையான ஆலமரத்தை அப்பகுதி மக்கள் பேணிக் காத்து வருவது மட்டுமல்லாமல், அதற்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் நேர்த்தியுடன் பாதுகாத்து வருகின்றனர். 

இதனிடையே, அங்கு அமைந்துள்ள ஓடை முனியாண்டி கோயில் மற்றும் பழமையான ஆலமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு, புனித நீர் கலசங்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர், புனித நீர் ஆலமரத்திற்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் இயற்கை தந்த அழகிய பரிசான மரங்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாக கருதப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.