"பழனிச்சாமி சுய லாபத்திற்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்" - பிரச்சாரத்தில் சி.ஆர்.சரஸ்வதி! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 4, 2024, 9:02 PM IST
தேனி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், தேனியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக வேட்பாளர் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
போட்டிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி திமுக மற்றும் அதிமுக கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், காலில் விழுந்து ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சுய லாபத்திற்காக அதிமுகவை திமுகவுடன் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறார்.
நமது கூட்டணியில் 10 ஆண்டுக்காலம் நாட்டை அமைதிப் பாதையில் கொண்டு செல்லும் பாரதப் பிரதமர் மோடிதான் மீண்டும் பாரதப் பிரதமர் என்று கூறி ஓட்டு கேட்கிறோம். தங்க தமிழ்ச்செல்வன் கூறுவாரா திமுக கூட்டணியில் யார் பிரதமரின் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி மற்றும் ஆர்.பி உதயகுமார் அதிமுகவை அடமானம் வைத்து விட்டதாக சி.ஆர்.சரஸ்வதி கடுமையாகச் சாடினார்.