நீலகிரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி? ஒரு கிராமமே கலெக்டரிடம் புகார்! - Money laundering petition - MONEY LAUNDERING PETITION
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2024, 4:14 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமையான இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் உதகை, தலையாட்டி மந்து பகுதி மக்கள் புகார் மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தனர். அந்த மனு குறித்து பேசிய மனுதாரர்களுள் ஒருவரான கல்பனா, “தலையாட்டி மந்து பகுதியில் வசிக்கும் குமார் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் 30க்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் ஏலச்சீட்டு பணம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் சீட்டு பணம் கொடுத்துள்ளார். ஆனால், பெண்ணின் திருமணத்திற்காகவும், மருத்துவச் செலவுக்காகவும், அவரிடம் செலுத்தி வந்த தொகையை கேட்டால் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகக் கூறி, 20க்கும் மேற்பட்டோரிடமிருந்து சுமார் ரூ.40 லட்சம் வரை ஏமாற்ற நினைக்கிறார். மேலும், பணத்தைக் கேட்க அவரது வீட்டுக்குச் சென்றால் பெண்களை வைத்து உங்கள் பெயரில் போலீசில் வேறு மாதிரி புகார் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம், எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.