ஶ்ரீரங்கத்தில் சித்திரை தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் நடும் வைபவம் விமரிசை! - srirangam chithirai festival - SRIRANGAM CHITHIRAI FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Apr 26, 2024, 6:30 PM IST
திருச்சி: 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்கள் அனைவராலும் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வரிந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருத்தேர் உற்சவம் வருகின்ற மே 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வரும் 28ஆம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்.26) சித்திரைத் தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க, ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் பூஜைகள் செய்து, திருத்தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், திருக்கோயில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். முன்னதாக, சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.