ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? எம்எல்ஏ முக்கிய தகவல்! - Srirangam MLA Palaniyandi - SRIRANGAM MLA PALANIYANDI
🎬 Watch Now: Feature Video
Published : Sep 1, 2024, 4:52 PM IST
திருச்சி: ஶ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் இருக்கும் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த கன அடி தண்ணீர் தாங்காமல் தடுப்பணைகள் சேதமடைந்தது. இதன் காரணமாக 5,000 ஏக்கர் நில பாசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
சேதமடைந்த தடுப்பணைகளை மணல் மூட்டை வைத்து தடுத்து புதுவாத்தலை, ராமவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் தேக்கி வைத்திருக்கிறோம். இந்த தகவலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தடுப்பணைகள் நிரந்தரமாக கட்டித்தர நடவடிக்கை எடுப்போம். திருச்சி மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது. ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும்” என தெரிவித்தார்.