"தொழுகையை வேறு எங்காவது செய்திருக்கலாம்" டெல்லி இஸ்லாமியர்கள் தாக்குதல் குறித்து எல்.முருகன் கூறியது என்ன? - இஸ்லாமியர்களை தாக்கிய டெல்லி போலீஸ்
🎬 Watch Now: Feature Video
Published : Mar 10, 2024, 12:41 PM IST
சென்னை: சென்னையில் இருந்து கோவை செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "பிரதமர் மோடி கடந்த ஆண்டு உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் 200 ரூபாய் குறைத்து, 400 ரூபாய் மானியம் அளித்தார். அதேபோல், தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பெண்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட மூன்றரை கோடி வீடு கட்டப்பட்டுள்ளது" என பதிலளித்தார்.
தொடர்ந்து டெல்லியில் சாலையில் தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை காவலர் ஒருவர் உதைத்துக் குறித்து கேட்ட போது, சாலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது. அவர் சாலையில் தொழுகையில் ஈடுபடாமல் வேறு இடத்தில் நடத்தி இருக்கலாம். மேலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்ததும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.