திடீரென வேப்பமரத்தில் இருந்து வழிந்த பால்.. நெல்லை மேலப்பாளையம் அருகே அதிசயம்! - Tirunelveli milk drip from tree - TIRUNELVELI MILK DRIP FROM TREE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 24, 2024, 5:20 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் அமைந்துள்ள பூங்கா அருகே சாலையோர வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இன்று திடீரென காலையில் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் சுரக்கத் தொடங்கியுள்ளது. லேசாக வெளியேறிய திரவம், பின்னர் வேகமாக வழிந்து கொட்டியதால் அவ்வழியாகச் சென்றவர்கள் அதனைப் பார்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்களாக மாறிய அவர்கள், பால் வடிந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள் ஆடை அணிவித்து, சந்தனம், குங்குமம் மஞ்சள் வைத்து, மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அணிவித்து, தேங்காய் பழம் ஆகியவை படையல் போட்டு வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்கள் பரவசமுடன் குவிந்து வருவதால், மேலப்பாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென சாலை ஓரம் இருந்த வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிந்ததால், மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி, அப்பகுதி மக்கள் ஒன்றாக திரண்டு வழிபட்டு வருவதால் மேலப்பாளையம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.