சத்தியமங்கலம் - கடம்பூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம்.. வனத்துறை எச்சரிக்கை! - Leopard in Kadambur Road - LEOPARD IN KADAMBUR ROAD
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/19-05-2024/640-480-21506693-thumbnail-16x9-erdd.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 19, 2024, 4:53 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. குறிப்பாக, சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் குறுகிய மலைப்பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறும் வனத்துறை முன்னதாகவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூருக்கு காரில் புறப்பட்ட இளைஞர்கள், இன்று அதிகாலை போன்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த சிறுத்தை சாலையில் ஹாயாக நடந்து சென்றுள்ளது. சிறுத்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் காரை நிறுத்தி உள்ளனர். பின்னர், இளைஞர்களின் கார் இரைச்சல் சத்தம் கேட்டு சிறுத்தை சாலையோர தடுப்பு கம்பிக்கு அடியில் பதுங்கிக் கொண்டுள்ளது.
இதனை வீடியோ எடுத்த காரில் சென்ற இளைஞர்கள், அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், காரில் சென்ற இளைஞர்கள், கேஎன் பாளையம் வனச் சோதனைச்சாவடிக்கு சிறுத்தை குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலை அறிந்த வனத்துறையினர், கடம்பூர் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்தும், வாகனத்தில் இருந்து எவரும் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.