'இன்னைக்கு ஒரு புடி'.. திண்டுக்கல்லில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா! - Sellamanthadi Fishing Festival - SELLAMANTHADI FISHING FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : May 12, 2024, 7:42 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட செல்லமந்தாடி பகுதியில் அமைந்துள்ளது செல்லமந்தாடி குளம். இந்த குளத்தில் கடந்த வருடத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியது. இதனை அடுத்து, ஊர் பொதுமக்கள் சார்பாக குளத்தில் மீன்கள் வாங்கி வளர்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது கோடை காலம் என்பதால் குளத்தில் தொடர்ந்து நீர் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கலைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வந்தனர். மேலும், மீன் பிடிப்பதற்காக வலைகள், பரி, கச்சா மற்றும் ஊத்தா போன்றவற்றைக் கொண்டு வந்து இருந்தனர்.
திருவிழா துவங்கியதும் ,கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கிய கிராமத்து மக்கள், போட்டி போட்டிக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலான கட்லா, ஜிலேபி, ரோகு, விரால் உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்தன. இதனால் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.