தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்.. தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்! - Heavy Traffic in Tambaram - HEAVY TRAFFIC IN TAMBARAM
🎬 Watch Now: Feature Video
Published : Aug 19, 2024, 11:11 AM IST
சென்னை: சுதந்திர தின விழா, வார இறுதி விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் சென்றனர். தற்போது தொடர் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று இரவு முதல் மக்கள் மீண்டும் கூட்டம் கூட்டமாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
நேற்று இரவு முதலே சென்னையை நோக்கி அதிகப்படியான வாகனங்கள் வந்து கொண்டிருப்பதால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு தாம்பரம், கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக அதிகப்படியான பயணிகள் பேருந்து நிலையத்தில் குவிந்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் அலுவலகங்களுக்குச் செல்வோர்கள் தனது சொந்த வாகனங்களில் செல்வதாலும், மாநகர பேருந்துகள் சிறப்புப் பேருந்துகள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் தாம்பரம் குரோம்பேட்டை பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.