ஆம்பூரில் லாரியை முந்த முயன்ற அரசுப் பேருந்து விபத்து! - Govt bus accident in Ambur - GOVT BUS ACCIDENT IN AMBUR
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-05-2024/640-480-21390914-thumbnail-16x9-vpm.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 5, 2024, 3:12 PM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் மீது வந்த போது, முன்னால் சென்ற லாரியை அரசுப் பேருந்து முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கற்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தி, சாலை போக்குவரத்தை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், லாரியை முந்திச் செல்ல முயன்ற அரசுப் பேருந்து தடுப்புக் கற்களின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.