ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.15 ஆயிரம் மோசடி.. வைரலாகும் சிசிடி காட்சி! - erode news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 1:31 PM IST

Updated : Feb 10, 2024, 2:31 PM IST

ஈரோடு: ஏடிஎம் மையத்தில் கூலித்தொழிலாளிக்கு உதவுவதுபோல் நடித்து, ஏடிஎம் கார்டை மாற்றி, வங்கிக் கணக்கில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு, மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். விசைத்தறி கூலித்தொழிலாளியான இவர், தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி, கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது ஏடிஎம்-இல் பணம் எடுக்க முயற்சி செய்த நிலையில், அவருக்கு அருகில் இருந்த மர்ம நபர் உதவி செய்துள்ளார். ஆனால், பணம் எடுக்காமல் மாரியப்பன் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாரியப்பன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு குறித்து, ஏடிஎம் கார்டு மூலம் பார்க்கச் சென்ற போது, கார்டு தவறானது என தெரிய வந்துள்ளது. இது குறித்து வடக்கு காவல் நிலையத்தில், மாரியப்பன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், போலீசார் ஏடிஎம்-இல் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சியை சோதனை செய்தனர். இதில், மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Feb 10, 2024, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.