அரசு பேருந்தில் கழன்ற கியர் ராடு! கைவலிக்க பிடித்துக் கொண்ட பயணி..! வைரலாகும் வீடியோ! - government bus
🎬 Watch Now: Feature Video
Published : Feb 5, 2024, 11:00 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு பகுதிக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டு இருந்து. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த பேருந்து சித்தரேவு பெரும்பறை, தாண்டிக்குடி வழித்தடத்தில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென பேருந்தின் கியர் மாற்றும் ராடு கம்பி இணைப்பு கம்பியில் இருந்து விலகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெரும் அசாம்பவிதம் நடைபெறாத வண்ணம், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை பிடித்துக் கொள்ள, ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். வளைவு, நெளிவு கொண்ட மலைப் பாதையில் பேருந்தின் கியர் விலகியதால் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் பேருந்தில் பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஏற்கனவே கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளுக்குத் திண்டுக்கல்லில் இருந்து போதுமான பேருந்துகள் இயங்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மலைப் பகுதியில் இது போன்ற சேதமடைந்த பேருந்துகளை இயக்குவதால் மலைப்பகுதியில் விபத்து ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது.
எனவே கொடைக்கானல் பகுதிகளில் தரமான அரசு பேருந்துகளை இயக்க திண்டுக்கல் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.