"எம்ஜிஆர் - நம்பியார் போல் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம்" - திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளரிடம் பேச்சு! - Dindigul Srinivasan - DINDIGUL SRINIVASAN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 6:43 PM IST
திண்டுக்கல்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் எஸ்டிபிஐ வேட்பாளரை அதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் திண்டுக்கல் தெற்கு பகுதியிலான மேட்டுப்பட்டி, குள்ளனம்பட்டி, பாரதிபுரம் நாகல்நகர் அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் திமுக வேட்பாளர்களும் நேர் எதிரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாழ்த்துக்கள் தெரிவித்து, நமக்குள் சண்டை வேண்டாம் ஒதுங்கி போய் விடுவோம் எனக் கூறினார். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என தெண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.