கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - Kalugumalai Panguni Uthiram
🎬 Watch Now: Feature Video
Published : Mar 15, 2024, 4:38 PM IST
தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று (மார்ச் 15) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய சிகரமாக கருதப்படும் திருத்தேரோட்டம், வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 24ஆம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 25ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.