“சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” - வீட்டுத் தோட்டத்தில் விசிட் அடித்த முதலை! - crocodile enters house - CROCODILE ENTERS HOUSE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 20, 2024, 8:08 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், மகாராஜபுரத்தை அடுத்த கடம்பங்குடி கிராமத்தில், களத்து மேட்டுத் தெருவில் வசிக்கும் காசிராமன் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில், இன்று காலை 4 அடி நீளம் கொண்ட முதலை வந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, சரக வனஅலுவலர் பொன்னுசாமி உத்தரவின் பேரில், வனவர் சண்முகம் தலைமையிலான வனப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அச்சுறுத்திக் கொண்டிருந்த முதலையை பஞ்சாயத்து தலைவர் இளங்கோவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் பத்திரமாக மீட்டனர்.
4 அடி நீளம் கொண்ட இந்த முதலையின் எடை 50 கிலோவாகும். பின்னர் பிடிபட்ட முதலையை பாதுகாப்பாக, அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். இந்த முதலை கொள்ளிடம் ஆற்றுப்பகுதி வழியாக இரவு நேரத்தில் கடம்பங்குடி கிராமத்திற்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; தேரை வடம் பிடித்து இழுத்த ஏராளமான பக்தர்கள் - Chithirai Chariot Festival