குழந்தையை கடத்தினால் அலாரம்.. விருதுநகர் அரசு மருத்துவமனையில் அசத்தல் ஏற்பாடு! - Virudhunagar Government Hospital - VIRUDHUNAGAR GOVERNMENT HOSPITAL
🎬 Watch Now: Feature Video
Published : May 22, 2024, 5:38 PM IST
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவமனையில், விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்த கர்ப்பிணிகள் ஆண்டிற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். எனவே, எப்போதும் இந்த மருத்துவமனை பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், குழந்தை கடத்தலைத் தடுக்கும் விதமாக, தாய்க்கு பெயருடன் பச்சை நிற அடையாள அட்டை, அவரை மருத்துவமனையில் தங்கி பார்த்துக் கொள்பவருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும், குழந்தையின் இடது கணுக்காலில் நீல நிறப்பட்டை பொருத்தப்படுகிறது.
இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் மகப்பேறு வார்டில் இருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றால் மருத்துவமனை வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பமான சென்சார் கருவி, சத்தம் கொடுத்து அடையாளம் காண்பித்து விடும்.
மேலும் தாய், உடன் தங்கி இருப்பவர்களும் அடையாள அட்டை இல்லாமல் குழந்தையுடன் வெளியே சென்றால் சென்சார் கருவி சத்தத்தை எழுப்பி அடையாளம் காண்பித்து கொடுத்து விடும். இந்த நவீன தொழில்நுட்பம் கர்ப்பிணி தாய்மார்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.