திருப்பத்தூரில் பூத்து குலுங்கிய பிரம்ம கமல பூ! ஆடி மாதம் மட்டும் பூக்கும் அதிசயம்! - Brahma Kamalam flower Bloom
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் அன்பு. அவரது வீட்டில் வெற்றிலை உட்பட பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமல பூ செடியையும் வளர்த்து வருகிறார்.
இந்த பிரம்ம கமலம் பூக்கள் என்பது இமயமலை சாரல்களில் பனி படர்ந்த சூழலில் அதிகம் பூத்துக் குலுங்கும். தற்போது அனைத்து பகுதிகளிலும் இந்த பூக்கள் நடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கேதார்நாத், துங்கநாத், பத்ரிநாத் போன்ற சிவாலயங்களில் சிவனுக்கு மிகவும் உகந்த பூக்களாக இது கருதப்படுகிறது. இந்த பூ ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே பூக்கும் பூவாகும்.
மேலும், இந்த பூ பிரம்மனுடைய நாபிக் கமலத்திலிருந்து உருவானது என நம்பிக்கை ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போல இருப்பதனால், இதில் பிரம்மன் அமர்ந்திருப்பது போல காட்சி அளிக்கிறது. இந்நிலையில் இன்று சுமார் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் திருப்பத்தூரில் பூத்து குலுங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த செடியின் பூத்து வருவதால் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.