குன்னூர் பேருந்து நிலையத்தில் உலா வந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த மக்கள்..!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 6, 2024, 9:20 PM IST
நீலகிரி: குன்னூர் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது. இதில் சில நேரங்களில் பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது சர்வசாதாரணமாக உள்ளது. இந்த நிலையில், குன்னூர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாசிகளும், தோட்டத் தொழிலாளர்களும் மற்றும் மாணவ மாணவியர் பேருந்துக்காக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இன்று (நவ.06) ஐந்து வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று குன்னூர் பேருந்து நிலையத்தில் உலா வந்ததை கண்டு பேருந்து பயணிகள் அச்சமடைந்தனர். மேலும், அதிஸ்டவசமாக அங்கிருந்த பொதுமக்கள் யாரையும் அது தாக்காமல் அங்கிருந்து சென்றுள்ளது.
மேலும், இதுபோல வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த குன்னூர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.