ETV Bharat / state

சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம்; ஆய்வு செய்ய உள்துறைக்கு உத்தரவு! - MADRAS HIGH COURT

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 11:05 PM IST

சென்னை : சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோபாலபிள்ளை விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில் விசாரணை கைதியாக உள்ள தனது உறவினர் புஷ்பராஜ் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புஷ்பராஜ் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் புஷ்பராஜை தனிமைச் சிறையில் அடைத்ததோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசி உள்ளனர்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : உணவு குறித்த புகாரால் விசாரணைக் கைதிக்கு தனிமை சிறையா? - சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக உள்துறைச் செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் நேரில் சென்று கைதிகளுக்கு வழங்கப்படும் உணவினை சோதனை செய்தும், சிறை வார்டன்களை ஆர்டர்லியாக பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு குறித்து மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.