மதுரை : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06732) திருச்செந்தூரிலிருந்து நாளை( நவ 7) இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சான்விளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தத்தான்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை வழியாக இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இதையும் படிங்க : முருகனுக்கு அரோகரா.. கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்!
மறு மார்க்கமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06731) திருநெல்வேலியில் இருந்து நாளை(நவ 7) இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சான்விளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக நவ 8ம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு திருச்செந்தூர் சேரும் விதமாக தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ரயிலில் 9 பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்