ETV Bharat / state

கஸ்தூரி முன்ஜாமீன் கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு! - HIGH COURT MADURAI BENCH

நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நடிகை கஸ்தூரி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
நடிகை கஸ்தூரி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 4:34 PM IST

Updated : Nov 12, 2024, 7:00 PM IST

மதுரை: பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாகப் பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதற்கிடையே பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில் முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கஸ்தூரி பேசிய காட்சிகளும் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம், செல்போனை பறித்தவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு..! - ஐகோர்ட் மதுரை கிளை!

இதன் பின்னர் கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்து தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட தனிநபர்கள் குறித்தே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் மன்னிப்பு கோரியும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, "குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு ஏன் கூறினார்? அதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும் சமூக ஆர்வலர் என தன்னை கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்? அந்த வீடியோக்களை பார்க்கையில் அது தேவையற்ற விளைவை ஏற்படுத்தும்தானே? மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக உள்ளது" என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுப் பேசியுள்ளார். தெலுங்கு பேசும் நட்பு மாநில திருப்பதி கோவிலுக்கு 40% தமிழ் பக்தர்கள் சென்று வரும் சூழலில், மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல. எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Last Updated : Nov 12, 2024, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.